பற்றாக்குறையாக குடிநீர்; பரிதவிக்க செய்யும் ரோடு; நாவினிப்பட்டி ஊராட்சியில் நிலவும் அவலம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் ஒன்றியம் நாவினிப்பட்டி ஊராட்சியில் பெருமாள்பட்டி, சத்தியபுரம், ஆதிதிராவிட காலனியில் ஆழ்குழாய் அமைத்து குளியல் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.வடக்குநாவினிபட்டியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.நாவினிப்பட்டியில் இரு கழிவு நீர் கால்வாய்கள்அமைக்கப்பட்டுள்ளன. நாவினிபட்டி, அரசு கல்லுாரி, வடக்கு நாவினிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுர

மேலுார் : மேலுார் ஒன்றியம் நாவினிப்பட்டி ஊராட்சியில் பெருமாள்பட்டி, சத்தியபுரம், ஆதிதிராவிட காலனியில் ஆழ்குழாய் அமைத்து குளியல் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

வடக்குநாவினிபட்டியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.நாவினிப்பட்டியில் இரு கழிவு நீர் கால்வாய்கள்அமைக்கப்பட்டுள்ளன. நாவினிபட்டி, அரசு கல்லுாரி, வடக்கு நாவினிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள்,தெருவிளக்குகள் உள்ளன. ஆனால் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கோயில்பட்டி, சத்தியபுரம், கூத்தப்பன்பட்டியில் ரோடு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் இன்றி பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் பேசியதிலிருந்து...வெளியூர் பஸ்கள் நிற்குமாசம்சுதீன்: நாவினிப்பட்டியலிருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர். வெளியூர் பஸ்கள் இங்கு நிற்பதில்லை. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் சுட்டிகாட்டியும் நடவடிக்கை இல்லை. அழகர்நகரில் இருந்து அழகநாதபுரம் வரை ரோடுபடுமோசமாகவுள்ளது.

ஜல்லி கற்கள் மீது நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர மறுக்கின்றன. கோயில்பட்டியில்40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி சிமென்ட் பூச்சுகள் இடிந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியில் நீட்டிக்கொண்டுள்ளன. குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.குடிநீருக்காக அலைச்சல்பொன்னன்: ஆதிதிராவிடர் காலனி, கூத்தப்பன்பட்டி, பெருமாள்பட்டி பகுதிகளில் ஊராட்சி சார்பில்விநியோகிகப்படும் குடிநீர் பற்றாக்குறையாகவுள்ளது.

பல கி.மீ., துாரம் சென்று குடிநீரை கொண்டு வர வேண்டியுள்ளது. அல்லது குடம் ரூ.12க்குவிலைக்கு வாங்கிவேண்டியுள்ளது. ரேஷன் கடை பழமையான வாடகை கட்டடத்தில் இயங்குவதால் உயிர் பயத்துடனே மக்கள் கடைக்கு செல்கின்றனர். கழிவு நீர் கால்வாய் இன்றி தெருக்களில் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

ஊராட்சி தலைவர் உறுதிஊராட்சி தலைவர் தெளலத்பீவி: ஊராட்சியில் தேவையா இடங்களில் புதிய ரோடுகள் அமைக்கவும், மேல்நிலை தொட்டி, ரேஷன் கடை கட்டவும் ஊராட்சி சார்பில் திட்டஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.வெளியூர் பஸ்கள் நின்று செல்ல ஊராட்சி சார்பில் மீண்டும் அரசு போக்குவரத்து கழக மேலாளரை சந்தித்து முறையிடப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X