பொது செய்தி

இந்தியா

87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: ஒடிசாவில் வெள்ளப்பெருக்கு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புவனேஸ்வர்-ஒடிசாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.புரியில் 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் கரையை கடந்து, வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து

புவனேஸ்வர்-ஒடிசாவில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.



latest tamil news


புரியில் 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளது.ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் கரையை கடந்து, வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 24 மணி நேரத்தில், 19.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இது, கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவு. இங்கு, சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில், 34.1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த 87 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான மழை பெய்திருப்பது இதுவே முதல் முறை. தொடர் மழை பெய்து வருவதால், 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


இதற்கிடையே, மாநில முதல்வராக நேற்று பதவியேற்ற பூபேந்திர படேல், அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்ற பின், அதிகாரிகளுடன் தன் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில், சவுராஷ்டிராவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை, ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-செப்-202107:51:27 IST Report Abuse
Natarajan Ramanathan அங்கே புவியரசன் இல்லை போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X