பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்../

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆர்ப்பாட்டம்மதுரையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தலைவர் தங்கவேல்பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.1400 உயர்வு உத்தரவை திருத்தம் செய்து அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஏழாவது சம்பளக்குழு நிலுவைத்தொகையை

ஆர்ப்பாட்டம்

மதுரையில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தலைவர் தங்கவேல்பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் மேல்நிலைத்தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.1400 உயர்வு உத்தரவை திருத்தம் செய்து அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஏழாவது சம்பளக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நாட்டுமாடு நலச்சங்கம் முறையீடு

மதுரையில் நாட்டுமாடு நலச்சங்க தலைவர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு: ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மலைமாடுகளை மலையில் மேய்ப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, குதிரை வண்டி பந்தயம், மாட்டுவண்டி போட்டிகளை ஊக்குவிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இசைக்கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு இசைக்கலைஞர்கள் சங்கத்தினர் மாநில துணை தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'நலிந்த கிராமிய கலைஞர்கள் உதவித்தொகை பெறும் வயதை ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 45 ஆக குறைக்க வேண்டும். முதிய கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். பேரிடர் கால நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு அளிக்கப்பட்டது,' என்றனர்.

வைகையில் பாலம் அமையுமா

மதுரையில் சமூக ஆர்வலர் சரவணன் கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: மதுரையில் கோரிப்பாளையம் நெல்பேட்டையை இணைக்கும் ஏ.வி.பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால் பாலம் பலம் இழந்து வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆழ்வார்புரம் - நெல்பேட்டை இடையே புதிய பாலம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X