பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கழிவுகளை அழிக்கும் 'பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்'

Added : செப் 14, 2021
Share
Advertisement
கம்பம் : மருத்துவக் கழிவுகளை கையாளும் 'பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்' தேனி மாவட்டத்தில் அமைக்க நலப்பணிகள் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஆய்வகங்களில் இருந்து வெளிவரும் மருத்துவக்கழிவுகளை, கையாள 'பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்' விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே

கம்பம் : மருத்துவக் கழிவுகளை கையாளும் 'பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்' தேனி மாவட்டத்தில் அமைக்க நலப்பணிகள் இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஆய்வகங்களில் இருந்து வெளிவரும் மருத்துவக்கழிவுகளை, கையாள 'பயோ மெடிக்கல் வேஸ்ட் பிளாண்ட்' விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே செயல்பட்டு வருகிறது. மாவட்டங்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் இங்கு முறைப்படி அழிக்கப்படுகிறது.

உச்சபட்ச வெப்பத்தில் அழித்தல், தீ வைத்து எரித்தல் என மருத்துவக்கழிவுகள் கையாளப்படுகிறது.கொரோனாவால் சராசரியை விட, அதிக மருத்துவக்கழிவுகள் சேகரமாகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேனி -போடி ரோட்டில் இடம் தேர்வு செய்து பிளாண்ட் அமைக்க முயற்சித்தனர்.

ஆனால் நிறைவேறவில்லை. தற்போது தேவை அதிகமாக இருப்பதால் மாவட்டத்தில் மருத்துவ கழிவு அழிக்கும் பிளாண்ட் அமைக்க மருத்துவத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X