பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக ஆதார், இ சேவை மையம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் ஆதார், இசேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார், இ சேவை மையத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இவற்றில் பயன்பெற குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதே போல் இங்கு வரும் மக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் ஆதார், இசேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார், இ சேவை மையத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இவற்றில் பயன்பெற குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதே போல் இங்கு வரும் மக்கள் வரிசையில் காத்திருக்கவும் போதிய இடவசதியில்லை. டோக்கன் பெற்று கலெக்டர் அலுவலகத்தின் வெளியில் வாகனம் நிறுத்தும் இடங்களில் காத்திருக்கின்றனர்.

இதை தவிர்க்க பொதுமக்கள் வசதிக்காக, கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு அருகிலேயே புதிதாக 2 ஆதார், இ சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வருவோர் நிழலில் அமர இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு எத்தனை பேர் வந்தாலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மையங்களுக்கு வரும் மக்கள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு எதிரே உள்ள நுழைவு வாயில் வழியாக செல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X