தமிழ்நாடு

குறைந்தபட்ச ஆதார விலை கொள் முதலுக்கு வலியுறுத்தல்!

Added : செப் 14, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் சாகுபடியாகி உள்ள வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படையாத வகையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 7600 எக்டேரில் வெங்காயம் நடவு செய்துள்ளனர். 400 எக்டேரில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். சீரான தட்ப வெட்ப நிலையால் ஜூலை ஆகஸ்ட்,

தேனி : தேனி மாவட்டத்தில் சாகுபடியாகி உள்ள வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படையாத வகையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 7600 எக்டேரில் வெங்காயம் நடவு செய்துள்ளனர். 400 எக்டேரில் ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர். சீரான தட்ப வெட்ப நிலையால் ஜூலை ஆகஸ்ட், செப்டம்பரில் நாட்டு வெங்காயம் பயிரிடுவது வழக்கம். விதை வெங்காயம் கிலோ ரூ.60க்கு வாங்கி, உழவு, நடவு, களையெடுப்பு என ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு ஏற்படுகிறது. 60 முதல் 80டன் மகசூல் கிடைக்கும்.

கடந்தாண்டு செப்டம்பரில் வெங்காய சாகுபடி அதிகரித்தது. ஆனாலும் கிலோ ரூ.70 முதல் 100 வரை விற்பனையானது. தற்போதும் விளைச்சல் அதிகமான நிலையில் கிலோ ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விதைப்பு, அறுவடை கூலிக்குக் கூட கட்டாத நிலையில் விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

பள்ளப்பட்டி விவசாயி சண்முகநாதன் கூறியதாவது:மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளோம். விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளோம். மழை பெய்து வெங்காயம் அழுகி வீணாகும் முன், வேளாண் வணிகத்துறை மூலம் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்யவும், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X