பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் பாதுகாப்பு முகமை அனுமதியின்றி ஹைவேவிஸ் ரோடு பணி முடக்கம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சின்னமனுார் : தேசிய புலிகள் காப்பக அனுமதி இல்லாததால் ைஹவேவிஸ் மலை பகுதியில் ரோடு பணி ஓராண்டிற்கும் மேலாக நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது.சின்னமனுாரில் இருந்து ைஹவேவிஸ் செல்லும் 46 கி.மீ., துார ரோடு 2015 ல் ரூ. 80 கோடியில் புதுப்பிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை துவக்கியது. மேகமலை, ைஹவேவிஸ் வரை பணி முடிந்தது. மீதமுள்ள 10 கி.மீ., ரோடுக்கு ரூ. 20 கோடியில் கடந்தாண்டு பணி

சின்னமனுார் : தேசிய புலிகள் காப்பக அனுமதி இல்லாததால் ைஹவேவிஸ் மலை பகுதியில் ரோடு பணி ஓராண்டிற்கும் மேலாக நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்துள்ளது.

சின்னமனுாரில் இருந்து ைஹவேவிஸ் செல்லும் 46 கி.மீ., துார ரோடு 2015 ல் ரூ. 80 கோடியில் புதுப்பிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை துவக்கியது. மேகமலை, ைஹவேவிஸ் வரை பணி முடிந்தது. மீதமுள்ள 10 கி.மீ., ரோடுக்கு ரூ. 20 கோடியில் கடந்தாண்டு பணி துவங்கியது. ைஹவேவிஸ் - மணலாறு வரை ரோடு அமைக்கப்பட்டது.

மணலாறிலிருந்து மகாராஜாமெட்டு வரை 6 கி.மீ., துார ரோடு பணி ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. மணலாறு இருந்து மகாராஜாமெட்டு வரை ரோட்டில் மெட்டல் பரப்பியுள்ளனர். வன உயிரின சரணாலயமாக இருந்த போது ரோடு அமைக்க அனுமதி பெறப்பட்டது.

2020ல் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்தால் டில்லியில் தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் புதிதாக அனுமதி பெற வேண்டும். இதனால் பணி தாமதமாகிறது. மணலாறு டூ மகாராஜாமெட்டு வரை ரோடு பணி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X