தமிழ்நாடு

ஏழை பயனாளிகளுக்கு ஊராட்சிகளில் பசுமை வீடு; தேனி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
தேனி : வீடு இல்லாத ஏழை, எளிய பயனாளிகளுக்கு ஊராட்சிகளில் பசுமை வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேனி ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.தேனி ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ரவி(கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் கிருஷ்ணசாமி

தேனி : வீடு இல்லாத ஏழை, எளிய பயனாளிகளுக்கு ஊராட்சிகளில் பசுமை வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேனி ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

தேனி ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ரவி(கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர் கிருஷ்ணசாமி பேசுகையில், 'ஊராட்சிகளில் பசுமை வீடு ஒதுக்கீடு செய்வதில் பராபட்சம் கூடாது.

வேண்டியவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதை கைவிட்டு, வீடு இல்லாத ஏழை, எளியவகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் வார்டுகளில் கழிப்பறை வசதியின்மை, 100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்துதல், மரக்கன்று நடும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கல், ரோடு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்ப்டும், புதிய அலுவலகம் கட்டப்படும் எனதலைவர் கூறினார்.

ரூ.3.41 கோடியில் அலுவலகம்

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடிப்பு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், '' ஒன்றிய அலுவலகம் 1961ல் கட்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துஉள்ளது. இக்கட்டடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததால் ரூ.12 லட்சத்தில் சீரமைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. பழங்கால கட்டடங்களை இடித்து புதியதாக கட்ட அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் இந்த கட்டடம் இடிக்கப்படுகிறது. தற்போது புது கட்டடம் கட்டும் பணிகளுக்கான மண்பரிசோதனை நடக்கிறது. ரூ.3.41 கோடி செலவில் இதே இடத்தில் 2 மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணி 2 முறை கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் துவங்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X