சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோணிமலையில் யானைகள் நடமாட்டத்தால் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கன்னிவாடி : தோணிமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.கன்னிவாடி வனப்பகுதி விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுவது வாடிக்கையாகி விட்டது. சாகுபடி சேதம் மட்டுமின்றி உயிர்பலி சம்பவங்களும் பண்ணைப்பட்டி, வெள்ள மடத்துப்பட்டியில் நடந்து உள்ளது.மலையடிவாரத்தில் நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா பகுதியில் இருந்த யானைகள், தற்போது

கன்னிவாடி : தோணிமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

கன்னிவாடி வனப்பகுதி விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுவது வாடிக்கையாகி விட்டது. சாகுபடி சேதம் மட்டுமின்றி உயிர்பலி சம்பவங்களும் பண்ணைப்பட்டி, வெள்ள மடத்துப்பட்டியில் நடந்து உள்ளது.மலையடிவாரத்தில் நாயோடை நீர்த்தேக்கம், ஆல்டா பகுதியில் இருந்த யானைகள், தற்போது தோணிமலை, குட்டிக்கரடு பகுதியில் தஞ்சமடைந்துள்ளன.

இப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மாலை நேரத்தில் யானைகளை கண்காணித்து விரட்ட, ஒலி எழுப்புதல், பட்டாசு வெடித்தல், புகை மூட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வசிப்போருக்கு, விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், ''சீசனுக்கேற்ப குறிப்பிட்ட வழித்தடங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளது. தோணிமலை, பெரியண்ண சுவாமி கோயில் பகுதியில், காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணி நடக்கிறது. அதற்கேற்ப விழிப்புணர்வு அளித்து, மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X