பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதி பணிக்கு தடுப்பூசி சான்று வலியுறுத்தல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ரெட்டியார்சத்திரம் : வேலை உறுதி பணி வழங்க தடுப்பூசி சான்று வலியுறுத்தப்படுவதால் மாற்றுத்திறனாளி பயனாளிகள் அலைக்கழிக்கப்படும் அவலம் தொடர்கிறது.முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதை முடுக்கி விட்டாலும் தட்டுப்பாடு தொடரவே செய்கிறது. வேலை உறுதி திட்டப் பயனாளிகளுக்கு தடுப்பூசி சான்றை களப்பணியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மாற்றுத்திறனாளி, முதியோர் உள்ளிட்ட

ரெட்டியார்சத்திரம் : வேலை உறுதி பணி வழங்க தடுப்பூசி சான்று வலியுறுத்தப்படுவதால் மாற்றுத்திறனாளி பயனாளிகள் அலைக்கழிக்கப்படும் அவலம் தொடர்கிறது.

முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதை முடுக்கி விட்டாலும் தட்டுப்பாடு தொடரவே செய்கிறது. வேலை உறுதி திட்டப் பயனாளிகளுக்கு தடுப்பூசி சான்றை களப்பணியாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். மாற்றுத்திறனாளி, முதியோர் உள்ளிட்ட பயனாளிகள், இணையத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்வதில் சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால் கிராமப்புற தனியார் சேவை மையங்கள், ஜெராக்ஸ் கடைகளில் சமூக இடைவெளியின்றி குவிகின்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பரமசிவம் கூறுகையில், ''தடுப்பூசியை கட்டாயமாக்கியதால், பல முகாம்களில் காலை 11:00 மணிக்கே மருந்து தட்டுப்பாடால் திருப்பி அனுப்பினர். வேலை உறுதி பணிக்கு, இச்சான்று பெற களப்பணியாளர்களை கட்டாயப்படுத்துகின்றனர். தனியார் நிறுவனங்கள், இதற்கு விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் சேவை மையங்களில் பதிவிறக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X