தமிழ்நாடு

பஸ்பயணத்தில் மாணவருக்கு கட்டுப்பாடு கிடையாதா? பள்ளி, கல்லூரிகளில் மட்டும்தான் உண்டா

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : பள்ளி, கல்லூரிகளில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் மாணவர்கள், வளாகத்திற்கு வெளியே இதனை கண்டு கொள்வதே கிடையாது.கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளோடு செப். 1 முதல் திறக்கப்பட்டது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவது என அனைத்தும் பள்ளி, கல்லூரி வளாகங்களில்
பஸ்பயணத்தில் மாணவருக்கு கட்டுப்பாடு கிடையாதா? பள்ளி, கல்லூரிகளில் மட்டும்தான் உண்டா

திண்டுக்கல் : பள்ளி, கல்லூரிகளில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் மாணவர்கள், வளாகத்திற்கு வெளியே இதனை கண்டு கொள்வதே கிடையாது.

கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளோடு செப். 1 முதல் திறக்கப்பட்டது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவது என அனைத்தும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மட்டுமே நடக்கிறது. பள்ளியை விட்டு வெளியே வந்தபின் மாணவர்களின் நிலை என்ன என்பதை பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர் பஸ்களையே பிரதானமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், பஸ்களில் எந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுகின்றனர். கூட்டத்தோடு கூட்டமாக நெருக்கடியடித்து மாணவர்கள் பயணிக்கின்றனர். இதனால் பொதுமக்களால் மாணவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்காத நிலையில் பஸ்களில் மொத்த கூட்டத்தையும் ஏற்றுவது பரவலுக்கு வழிக்கும். மூன்றாம் அலை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இந்த அலட்சியப் போக்கு பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். எனவே மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பஸ்களை ஏற்பாடு செய்தால் நலம் பயக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X