சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி முன்னிலை வகித்தனர். மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.'கடந்த ஆட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு மாதம் ரூ.1400

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கணேசன், பொருளாளர் ராணி முன்னிலை வகித்தனர். மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.'கடந்த ஆட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு மாதம் ரூ.1400 ஊதிய உயர்வு வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டது. இவர்கள் வாங்கும் ஊதியத்தை விட குறைவாக இருந்ததால் அமலாகவில்லை.

தற்போதைய ஊதியத்திற்கு மேல் ரூ.1400 ஊதிய உயர்வு வழங்க திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும்.மேலும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர், துாய்மை காவலர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பி.டி.ஓ., கையொப்பத்துடன் வழங்க வேண்டும். தற்போது வழங்கும் ரூ.3,600 ஊதியத்தை உயர்த்த வேண்டும். பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும். குப்பை சேகரிக்க பேட்டரி வண்டிகள் வழங்க வேண்டும்' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X