பொது செய்தி

தமிழ்நாடு

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு; 1046 பேர் எழுதுகின்றனர்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒன்பது மையங்களில் 10, 11ம் வகுப்பு துணைத் தேர்வை 1046 பேர் எழுத உள்ளனர்.நேற்று 10 ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது. இன்றும் (செப்.14) நடக்கிறது. நாளை (செப்.15) 11 ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், செப்.16 ல் 10 வகுப்பு தனித் தேர்வர்களுக்கும் துணைத் தேர்வு நடக்க உள்ளது. திண்டுக்கல் எம்.எஸ்.பி., நெய்க்காரபட்டி பி.ஆர்.ஜி., வேலப்பா,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒன்பது மையங்களில் 10, 11ம் வகுப்பு துணைத் தேர்வை 1046 பேர் எழுத உள்ளனர்.

நேற்று 10 ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கியது. இன்றும் (செப்.14) நடக்கிறது. நாளை (செப்.15) 11 ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், செப்.16 ல் 10 வகுப்பு தனித் தேர்வர்களுக்கும் துணைத் தேர்வு நடக்க உள்ளது. திண்டுக்கல் எம்.எஸ்.பி., நெய்க்காரபட்டி பி.ஆர்.ஜி., வேலப்பா, நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர்., மற்றும் வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு தனித் தேர்வர்கள் 180 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

செப்.16 ல் திண்டுக்கல் பண்ணை மெட்ரிக், அரசு ஆண்கள் பள்ளி, பழநி நகராட்சி ஆண்கள் பள்ளி, வத்தலக்குண்டு மகாலட்சுமி, வடமதுரை கலைமகள் பள்ளியில் 10 ம் வகுப்பு தனித் தேர்வர்கள் 866 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X