அடிப்படை வசதிக்கு தவிக்கும் ரெங்கசமுத்திரம் ஊராட்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். அனைத்து பகுதிக்கும் நிதி ஒதுக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகிறது.இந்த ஊராட்சியில் ரெங்கசமுத்திரம், ரெங்க சமுத்திரம் காலனி, நாச்சி யார்புரம், குறும்பட்டி, ஜம்புலிப்புத்துார், லட்சுமிபுரம், சீரங்காபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி கிராமங்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். அனைத்து பகுதிக்கும் நிதி ஒதுக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகிறது.

இந்த ஊராட்சியில் ரெங்கசமுத்திரம், ரெங்க சமுத்திரம் காலனி, நாச்சி யார்புரம், குறும்பட்டி, ஜம்புலிப்புத்துார், லட்சுமிபுரம், சீரங்காபுரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி கிராமங்கள் உள்ளன. அக் கிராமங்களிலும் குடிநீர், வடிகால், சிமென்ட் ரோடு வசதி முழுமை பெறவில்லை. குடிநீர் போதுமானதாக இல்லை.

ஆழ்குழாய் நீரை கிராமங்களிலும் கூடுதல் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் துாய்மை பணிகள் மேற்கொள்ள போதிய பணியாளர்கள் இல்லை. துாய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் வருவதால் சுகாதாரம் பாதிக்கிறது.பொதுமக்கள் கருத்து:மேல்நிலை தொட்டி தேவைஅ.சுப்புராஜ், லட்சுமிபுரம்: ஆரம்ப பள்ளி அருகில் சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி அகற்றி இரு ஆண்டுளாகியும், புதிய தொட்டி அமைக்கவில்லை.

2கி.மீ.,துாரத்தில் இருந்து குழாய் மூலம் போர்வெல் நீரை கொண்டு வந்து அருகில் உள்ள கிணற்றில் தேக்கி வினியோகிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றுக்கு மேல் மூடி இன்றி பாதுகாப்பற்று உள்ளது. விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் சொந்த செலவில் பொது இடங்களில் துாய்மை பணி செய்கின்றனர்.

புதர்மண்டிய கழிப்பிடம்

கே.மாரியப்பன், ஜம்புலிப்புத்துார்: இக்கிராமத்தில் கிராம சாவடி அருகே சாக்கடைப்பாலம் சேதம் அடைந்து இரு ஆண்டுகளாகியும் சீரமைக்கவில்லை. இப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. புதிய குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய இடங்களை சரிசெய்யவில்லை. சமீபத்தில் புதிய ரோடு அமைத்தும் பயனின்றி சேதமாகியது. பராமரிப்பு இன்றி பெண்கள் பொதுக்கழிப்பிடம் புதர்மண்டியுள்ளது. சமுதாயக்கூடம் அருகே குடிநீர் தொட்டி அமைக்க இங்கிருந்த கழிப்பறை அகற்றப்பட்டது. புதியகுடிநீர் தொட்டி அமைக்க வில்லை.

வேலை இன்றி சிரமம்

ச.முருகேஸ்வரி, அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி: பெண்கள் கழிப்பறை வசதி கேட்டு பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இப்பகுதியினரை புறக்கணிக்கின்றனர். விவசாய வேலையும் இன்றி சிரமப்படுகின்றனர். குடிநீர், வடிகால் வசதியை ஊராட்சியில் பல முறை கேட்டுப்பெற வேண்டி உள்ளது.

நிதி பற்றாக்குறை

கே,சுப்பிரமணி, ஊராட்சி தலைவர்: பல கிராமங்களை கொண்டுள்ள ஊராட்சியில் வளர்ச்சிக்கு தேவையான நிதி கிடைக்கவில்லை. அரசு மூலம் கிடைக்கப்பெறும் நிதியை அனைத்து பகுதிக்கும் பிரித்து பணிகள் மேற்கொள்வதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அடிப்படை தேவை பூர்த்தி செய்ய முடியவில்லை. தற்போது அரசு ஒதுக்கிய நிதியில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவசிய பணிகள் தேர்வுஎன்.ஜெயராமன், துணைத்தலைவர்: 15 வது நிதிக்குழு மூலம் ரூ.38 லட்சத்திற்கு அவசிய பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிதி கூடுதலாக கிடைக்கப்பெற்றதும், அனைத்து கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X