சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இழப்பீடுக்காக திண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி

Added : செப் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.திண்டுக்கல் அளவாச்சிபட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு ராஜூ 62. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு சென்ற போது, குட்டியபட்டி பிரிவு அருகே அரசு பஸ் மோதியது. காயமடைந்த ராஜூ சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல் அளவாச்சிபட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு ராஜூ 62. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு சென்ற போது, குட்டியபட்டி பிரிவு அருகே அரசு பஸ் மோதியது. காயமடைந்த ராஜூ சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜூவின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு, மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரித்த நீதிபதி சரவணன் அரசு போக்குவரத்து கழகம், இறந்த ராஜூவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்து 845 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அதை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு அரசு பஸ்சை, கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X