திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம்

Added : செப் 14, 2021
Share
திண்டுக்கல் : 'திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொடைக்கானல், பழநி நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் கிராம

திண்டுக்கல் : 'திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது' என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: கொரோனா பரவலை தடுக்க 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொடைக்கானல், பழநி நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் கிராம பஞ்சாயத்துகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மேலும் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில், 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம், தன்னார்வலர்கள் குறைந்தபட்சம் 100 பேரை திரட்டி, தடுப்பூசி செலுத்த ஊக்கமளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக கொரோனா கட்டுப்பாட்டு அறை 1077 க்கு தெரிவித்தால் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். கொரோனா இல்லாத மாவட்டமாக திண்டுக்கல்லை மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X