கேரள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உளவுத்துறையினர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உளவுத்துறையினர் எச்சரிக்கை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி : ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.இந்த இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அவர்களுடன்

புதுடில்லி : ஆப்கன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள, கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கி வருகின்றனர்.latest tamil news


இந்த இயக்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளாவை சேர்ந்த 25 பேர், 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்தனர். இதையடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆப்கன் சென்ற அவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள், சிறையில் இருந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக விடுவித்து உள்ளது. இவர்களில், கேரளாவை சேர்ந்த 25 பயங்கரவாதிகளால் நம் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என உளவுத்துறை எச்சரித்து உள்ளது.


latest tamil news


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆப்கன் சிறையில் இருந்த, கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினரின் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள இவர்கள், மீண்டும் நாடு திரும்பலாம் என தெரிகிறது. இதனால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம். எனவே, இப்பிரச்னையில் மத்திய - மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சர்வதேச விமானங்கள் கண்காணிப்பில் உள்ளன. அதேபோல் சர்வதேச எல்லைகள் மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X