வருவாய்க்கு பஞ்சமில்லாத கிராமத்தில் வசதி இல்லையே; வில்பட்டி பொதுமக்கள் குமுறல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கொடைக்கானல் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி வில்பட்டி. இங்குள்ள 50 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுத்திகரிப்பற்ற குடிநீர் சப்ளை, தூர்வாரப்படாத சாக்கடை, பயனற்ற சுகாதார வளாகங்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள்,

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொடைக்கானல் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி வில்பட்டி. இங்குள்ள 50 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுத்திகரிப்பற்ற குடிநீர் சப்ளை, தூர்வாரப்படாத சாக்கடை, பயனற்ற சுகாதார வளாகங்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள், இயந்திர பயன்பாடு, அள்ளப்படாத குப்பை, ரோட்டோரம் திறந்தவெளி கழிப்பிடம் என பிரச்னைகள் உள்ளன.

விவசாய நிலங்கள் கான்கிரீட் காடுகளாக உருமாற்றம், நீரோடைகள் ஆக்கிரமிப்பு எனவும் இவ்வூராட்சியின் அவலங்கள் தொடர்கின்றன. வருவாய்க்கு பஞ்சமில்லாத ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் ஏனோ நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. பொதுமக்கள் கருத்து:நிதி மோசடிமுத்துக்கிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர்: குறிஞ்சி ஆண்டவர் -ஐலேண்ட் ரோட்டில் தனியார் அமைத்த சிமென்ட் ரோட்டை ஊராட்சி அமைத்தது போல காட்டி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் அறவே இல்லாததால் இங்குள்ளோர் தவிக்கின்றனர். இரு ஆண்டுகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் செய்யாது நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.அரசு நிலம் ஆக்கிரமிப்புதினகரன், சமூக ஆர்வலர்: சின்னப் பள்ளம் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் இப்பகுதியினர் அவதியுறுகின்றனர். உருக்குலைந்த ரோட்டில் வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன.

குறிஞ்சி நகர், சேரன் நகர், திருவள்ளுவர் நகர் என குடிநீர் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. நீர்நிலைகள், அரசு தரிசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி கட்டுமானங்களில் மலைத் தள பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது.ராட்சத மரங்களால் ஆபத்துபாலகிருஷ்ணன், விவசாயி: சத்யா காலனியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் உள்ளன. இவை மழைக்காலத்தில் வேரோடு சாய்ந்து குடியிருப்புகளில் விழுவதால் உயிர் பயத்தில் வாழ்கின்றனர்.

அல்லி ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளதால் போதிய நீர் தேக்க முடியவில்லை. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரோடு வசதி இல்லை.பணியிடங்கள் காலிசிவமுருகன், விவசாயி: ஊராட்சியில் சுடுகாடு மற்றும் சுகாதார வளங்கள் பராமரிப்பின்றி உள்ளன. மக்களின் பிரச்னைகளில் ஊராட்சி கவனம் செலுத்த வேண்டும். ஊராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.



முறைகேடு நடக்கவில்லை

வாசு, தலைவர் (பொறுப்பு): ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ. 30 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சி ஆண்டவர் - ஐலேண்ட் பகுதியில் தனியார் ரோடு அமைத்துள்ளனர். இதற்கும் ஊராட்சிக்கும் சம்பந்தமில்லை. ஊராட்சியில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை. 14வது நிதிக்குழு மானியத்தில் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X