கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த, கடத்தல், முறைகேடுகளைத் தடுக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 300 மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றதாக குமார் உட்பட சிலர் மீது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். குமார் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு செய்தார்.

மதுரை : ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த, கடத்தல், முறைகேடுகளைத் தடுக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 300 மதிப்புள்ள 22 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றதாக குமார் உட்பட சிலர் மீது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். குமார் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு செய்தார். இதுபோல் சிலர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு, 'பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி சாப்பிட முடியாது. எனவே கார்டுதாரர்கள் ரேஷன் கடையிலிருந்து அரிசியை வாங்கி விற்றுள்ளனர்,' என தெரிவித்தது.நீதிபதி உத்தரவு: மனுதாரர்களுக்கு முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். கடத்தலின்போது பறிமுதல் செய்த ரேஷன் அரிசியின் அளவிற்கேற்ப குறிப்பிட்ட தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு மனுதாரர்கள் செலுத்த வேண்டும்.பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியின் தரம் சரியில்லாததால், கார்டுதாரர்கள் ரேஷன் கடையிலிருந்து அரிசியை வாங்கி விற்றதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.

இதனால் கடத்தல் தொடர்கிறது. பொதுவினியோகத் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற ரேஷன் அரிசியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரிசி கடத்தல், முறைகேடுகளைத் தடுக்க நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அக்குழு பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan Swaminathan - Dhaka,வங்கதேசம்
14-செப்-202118:06:43 IST Report Abuse
Ganesan Swaminathan மக்கள் வரி பணம் வீண் செலவு தான், லஞ்சத்தில் ஊறிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ... மக்களுக்கு நல்ல தரமான பொருள் கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X