கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை காமராஜ் பல்கலை பணி நியமன சர்ச்சை; தேர்வுக்குழு பரிந்துரைக்கு சிண்டிகேட் ஒப்புதல்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் சட்டவிரோத பணி நியமனம் தொடர்பான வழக்கில், இவ்விவகாரத்தில் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக 2017 மே முதல் 2018 ஜூன்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் சட்டவிரோத பணி நியமனம் தொடர்பான வழக்கில், இவ்விவகாரத்தில் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக 2017 மே முதல் 2018 ஜூன் வரை செல்லத்துரை பதவி வகித்தார். அவரது நியமனம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அவரது பதவிக்காலத்தில் பணிநியமனம், பதவி உயர்வில் விதிமீறலை விசாரிக்க அமைத்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையிலான உயர்நிலைக்குழு 2019 ல் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. 36 இணைப் பேராசிரியர்களை பேராசிரியர்களாகவும், 4 உதவி பேராசிரியர்களை இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு அளித்ததில் விதிகளை பின்பற்றவில்லை என அக்குழு முடிவுக்கு வந்துள்ளது.

குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு லயோனல் அந்தோணிராஜ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.பல்கலை தரப்பு: மறு ஆய்வுக்குழு ஆவணங்களை ஆய்வு செய்தது.

பின் தேர்வுக்குழு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கோரி நேர்காணல் நடத்தியது. 32 பேராசிரியர்களுக்கு போதிய தகுதிகள் உள்ளன. சில மாதங்கள் முன், பின்னாக 4 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் 6 பேருக்கு இரண்டாம்நிலைக்கு பதிலாக நேரடியாக நான்காம் நிலைக்கான இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடைநிலை பணியாளர்களில் சிலருக்கு சம்பள நிர்ணயத்தில் மாறுபாடு உள்ளது. இவற்றை சரி செய்ய மறுபரிசீலனை நடவடிக்கை மேற்கொள்ள தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இதற்கு சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிக்கை சமர்ப்பித்தது.மனுதாரர் தரப்பு: பல்கலை தரப்பு அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தெரிவித்தது. நீதிபதிகள் அக்.4க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X