பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை துறையில் ஒப்பந்த டாக்டர்கள் பணிநீக்கம்; சம்பளமும் வழங்காமல் இழுத்தடிப்பு

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : கால்நடை பராமரிப்புத்துறையில் 2018 ல் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 811 கால்நடை உதவி டாக்டர்கள் ஆகஸ்டில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சம்பளம் வழங்காததோடு மீண்டும் பணிவாய்ப்பும் வழங்கவில்லை.அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை உதவி டாக்டர்கள் காலி பணியிடங்களுக்கு ரூ.40ஆயிரம் மாத தொகுப்பூதியமாக ஒப்பந்த அடிப்படையில் 818 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

மதுரை : கால்நடை பராமரிப்புத்துறையில் 2018 ல் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 811 கால்நடை உதவி டாக்டர்கள் ஆகஸ்டில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சம்பளம் வழங்காததோடு மீண்டும் பணிவாய்ப்பும் வழங்கவில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை உதவி டாக்டர்கள் காலி பணியிடங்களுக்கு ரூ.40ஆயிரம் மாத தொகுப்பூதியமாக ஒப்பந்த அடிப்படையில் 818 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். அடுத்தாண்டு ஆகஸ்டில் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். ஒருநாள் அல்லது ஒருவாரம் பணிமுறிவை அடுத்து தொடர்ந்து 3 ஆண்டுகள் புதுப்பிக்கப்பட்டு வந்தனர்.

இந்தாண்டு ஆக. 25ல் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படவில்லை.ஒப்பந்த டாக்டர்களை நீக்கியதால் தற்போது தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்கள் டாக்டர்கள் இல்லாமலேயே செயல்படுகிறது. கால்நடை டாக்டர்கள் இல்லாத இடங்களில் முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்களை கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

ஏற்கனவே கால்நடை கிளை நிலையங்களில் பணிபுரியும் கால்நடை ஆய்வாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளனர். இரு இடங்களிலும் முழுமையான வேலை செய்ய முடியாமல் பணிச்சுமையால் தவிக்கின்றனர்.மூன்றாவது முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட போது ஜனவரியில் ஒருமுறையும், மே மாதத்திலும் தான் சம்பளம் மொத்தமாக வழங்கப்பட்டது. மே மாத சம்பளம் தொடங்கி ஆகஸ்ட் வரையான சம்பளம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஆக.25ம் தேதி 818 பேரையும் பணிமுறிவு செய்தனர். 20 நாட்களாகியும் பணிவாய்ப்பு தரவில்லை. சம்பளம் நிலுவை, பணி நிரந்தரமின்மை காரணமாக 818 பேரில் 70 பேர் வரை வெளி வேலைகளுக்கு சென்று விட்டனர். மீதியுள்ளோர் மறுவாய்ப்பு கிடைக்குமென காத்திருக்கின்றனர்.விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை நம்பியே இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்காமல் கால்நடை உதவி டாக்டர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-செப்-202110:19:29 IST Report Abuse
R.RAMACHANDRAN அரசாங்கத்தில் உள்ள நிரந்தர ஊழியர்கள் அவர்களுக்கு மாத கடைசியில் சம்பளம் பெற வழிவகை செய்து கொண்டு தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கச் செய்யாமல் கொடுமை படுத்துகின்றனர்.இந்த பாவங்களையெல்லாம் இவர்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொள்வது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X