நடிகர் சூரி சகோதரர் இல்ல திருமண விழாவில் நகை திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூரி சகோதரர் இல்ல திருமண விழாவில் நகை திருட்டு

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை : மதுரையில் காமெடி நடிகர் சூரி இல்ல திருமணம் நடந்த மண்டபத்தில் ஒன்பதரை பவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை சிந்தாமணி ரோட்டில் உள்ள திருமண மகாலில் செப்.,9ல் நடிகர் சூரியின் சகோதரர் மகள் திருமணம் நடந்தது. அன்று காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை திருமண சடங்கு நடந்தது. எல்லோரது கவனமும் மண்டப மேடையில் இருக்க, மணமகள் அறைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த
 நடிகர் சூரி சகோதரர் இல்ல  திருமண விழாவில் நகை திருட்டு

மதுரை : மதுரையில் காமெடி நடிகர் சூரி இல்ல திருமணம் நடந்த மண்டபத்தில் ஒன்பதரை பவுன் நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை சிந்தாமணி ரோட்டில் உள்ள திருமண மகாலில் செப்.,9ல் நடிகர் சூரியின் சகோதரர் மகள் திருமணம் நடந்தது. அன்று காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை திருமண சடங்கு நடந்தது. எல்லோரது கவனமும் மண்டப மேடையில் இருக்க, மணமகள் அறைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த நகை பெட்டியில் இருந்து 5 பவுன் மாலை, இரண்டரை பவுன் நெக்லஸ், 2 பவுன் வளையல்களை திருடிக்கொண்டு 'எஸ்கேப்' ஆனார்.

மதியத்திற்கு மேல் நகையை தேடிய போது திருடுபோனது தெரிந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் கீரைத்துரை போலீசில் புகார் செய்யப்பட்டது. மகாலில் உள்ள கண்காணிப்பு கேமரா, திருமண நிகழ்ச்சிகளை பதிவு செய்த வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை


மதுரை திருப்பாலை மீனாட்சியம்மன் நகர் 11வது தெருவில் வசிப்பவர் ரவீந்திரன் 60. டிராவல்ஸ் உரிமையாளர். இவரது வீட்டில் 38 பவுன் நகைகள், ரூ.2.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் செப்.10ல் ராமேஸ்வரம் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ள மகளிடம் விசாரித்தால்தான் திருடு போன நகைகள் அளவு தெரியவரும் என போலீசில் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X