பொது செய்தி

இந்தியா

இ.பி.எப்., - ஆதார் இணைப்பு வட கிழக்கில் 'கெடு' நீட்டிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசம், இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் தொழிலாளர்களின் இ.பி.எப்., கணக்குடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இ.பி.எப்.,சந்தாதாரர்களில் 94 சதவீதம் பேர்

புதுடில்லி:வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசம், இந்தாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும் தொழிலாளர்களின் இ.பி.எப்., கணக்குடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இ.பி.எப்.,சந்தாதாரர்களில் 94 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். எனினும் வட கிழக்கில் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆதார் எண் இணைப்பு மிகக் குறைந்த அளவிற்கே உள்ளது.

தொலை துாரத்திலும், நக்சலைட் ஆதிக்கப் பகுதிகளிலும் ஆதார் உடன் இ.பி.எப்., இணைப்பு குறைவாக நடந்திருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு, சணல், முந்திரி, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் உள்ளோர் அடிக்கடி பணியிடத்தை மாற்றுவதாலும், இ.பி.எப்., - ஆதார் இணைப்பு குறைவாக இருப்பது, அரசின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் தோட்டக் கலை, கட்டுமானம், பீடி உள்ளிட்ட சில தொழில்களில் உள்ள தொழிலாளர்களின் இ.பி.எப்., கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்க, நடப்பு செப்.,1 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X