அடாவடி தி.மு.க.,வினரை பின்னி எடுத்த கிராம மக்கள் | Dinamalar

அடாவடி தி.மு.க.,வினரை 'பின்னி எடுத்த' கிராம மக்கள்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (91) | |
தஞ்சாவூர்: பேக்கரியில் ரகளை செய்த தி.மு.க.,வினரை, கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன், 48, மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில், பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.ஆபாச பேச்சு மன்னார்குடி நகர தி.மு.க., இளைஞரணி செயலர் சுதாகர், 42, விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், 54, மாணவரணி நகர துணைச்
தஞ்சாவூர், அடாவடி, திமுக, கிராம மக்கள்

தஞ்சாவூர்: பேக்கரியில் ரகளை செய்த தி.மு.க.,வினரை, கிராம மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர், சூரக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தன், 48, மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில், பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.


ஆபாச பேச்சு


மன்னார்குடி நகர தி.மு.க., இளைஞரணி செயலர் சுதாகர், 42, விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர், 54, மாணவரணி நகர துணைச் செயலர் முருகேசன், 48 உள்ளிட்ட எட்டு பேர், நேற்று முன்தினம் மாலை காரில் வந்துள்ளனர்.சூரக்கோட்டையில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, பேக்கரியில் டீ குடித்தனர்.

அருகில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டு தகராறு செய்த அவர்கள், கடையில் இருந்த ரேவதி என்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி, அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளனர். ஆனந்தன் மகன் வசந்தன், 24 மற்றும் ஊழியர்கள், இதை தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், அவர்களை கடுமையாக தாக்கி, பேக்கரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில், ரேவதி, வசந்தன், பேக்கரி ஊழியர்கள் திருப்பதி, 25, பாஸ்கர், 24 வாடிக்கையாளர் கார்த்திகேயன், 35 ஆகியோர் காயமடைந்தனர்.


latest tamil news




6 பேர் படுகாயம்


தகவலறிந்து வந்த கிராம மக்கள், தி.மு.க.,வினரை மடக்கிப் பிடித்து, அடித்து உதைத்தனர். அவர்களில், இருவர் காரில் தப்பியோடினர். கிராம மக்கள் தாக்கியதில், சுதாகர், பாண்டவர், முருகேசன் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ரேவதி புகார்படி, தி.மு.க., பிரமுகர்கள் ஆறு பேர் மீதும், தி.மு.க., நிர்வாகி பாண்டவர் புகார்படி, சூரக்கோட்டையைச் சேர்ந்த ஒன்பது பேர் மீதும், தஞ்சாவூர் தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X