கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (17)
Advertisement
இளம் வயதிலேயே காலமாகி விட்ட பாரதி, ஒருவேளை நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் முழுமையான இடதுசாரி சிந்தனையாளராக பரிணமித்திருப்பார்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்'கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்
கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...

இளம் வயதிலேயே காலமாகி விட்ட பாரதி, ஒருவேளை நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் முழுமையான இடதுசாரி சிந்தனையாளராக பரிணமித்திருப்பார்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்


'கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.



'நீட்' தேர்வு அச்சத்தால் தம்பி தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட துயரம் தாளவியலாத கொடுமை. ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'அப்படி இருக்காது. தமிழக அரசியல் தலைவர்கள் எப்போதைக்கு, 'நீட்' அரசியலை கைவிடப் போகின்றனரோ என எண்ணி அந்த தவறான முடிவை எடுத்திருப்பாரோ...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.



தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இலங்கையும், அங்கு வாழும் தமிழர்களையும் சேர்க்க வேண்டும்' என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், முன்னுக்கு பின் முரணாக, அச்சட்டத்தை நீக்க வேண்டும் என இப்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர்


latest tamil news




'இப்போது மட்டுமில்லை; எப்போதுமே முன்னுக்கு பின் முரண் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில் தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



மகாகவி பாரதி பிறந்த நாளை, ஜாதிகள் ஒழிப்பு நாளாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் உறுதி மொழி எடுக்க உத்தரவிட வேண்டும்.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


இம்முறையும் இடம் கிடைக்காமல் போனால் என்ன செய்வதென்று அஞ்சி, கூடுதல் மனஅழுத்தத்திற்கு ஆளாகி பலியாகியிருக்கிறான்.'இத்தனை காலமாக இதை மறந்தது ஏனோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



நாட்டின் சொத்தாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் சிலவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்கத் தலைவர் கண்ணையா


'ஆறு லட்சம் கோடியை திரட்டி, பா.ஜ., கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப் போவதில்லை; நாட்டின் வளர்ச்சிக்குத் தானே பயன்படுத்த போகிறது...' என, கேட்கத் தோன்றும் வகையில், எஸ்.ஆர்.எம்.யு., தொழிற்சங்கத் தலைவர் கண்ணையா பேட்டி.



Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
15-செப்-202105:44:39 IST Report Abuse
T.Senthilsigamani ஏற்கனவே இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிட்டவில்லை.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் - கடந்த 1977ம் ஆண்டில் ரேலியில் இந்திராகாந்தி அவர்கள் போட்டியிட்டபோது அவரை ராஜ் நாராயணன் என்பவர் தோற்கடித்தார் .1967ஆம் ஆண்டு தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காமராஜர் அவர்கள் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோற்றார்.1996-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா அவர்கள் தோல்வி அடைந்தார். இதை போல முலாயம் சிங் யாதவ் ,மாயாவதி ,வைகோ,லாலு பிரசாத் யாதவ் என பலப்பல அரசியல் தலைவர்கள் தேர்தலில் தோல்வியுற்று ,பின்பு ஜெயித்தும் காட்டியிருக்கிறார்கள்.தேர்தலில் தோற்றதிற்காக அரசியல் தலைவர்கள் தற்கொலை செய்து கொள்வது கிடையாது .அப்படியே செய்து கொண்டாலும் அதற்காக தேர்தல் கூடாது என யாரும் சொல்லுவது இல்லை .இந்த உண்மைகளை மாணவர்களுக்கு புரிய வைப்பது தான் அரசியல் தலைவர்களின் முதற்கடமை .அதை விடுத்து மாணவர்களின் சாவில் அரசியல் செய்ய கூடாது.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
14-செப்-202117:23:33 IST Report Abuse
sundarsvpr விடுதலைக்கு பிறகு எட்டயபுர சுப்பிரமணி வாழ்ந்து இருந்தால் கவிதை எழுதிருக்க மாட்டார். நல்லதை எழுத வாய்ப்பு இருக்காது. என்று மடியும் இந்த சுதந்திர தாகம் என்று எழுதிய கை என்று மடியும் இந்த ஊழல் நாஸ்திகவாசம் மறையும் என்று நடகக இயலாததை எழுத பராசக்தி அனுமதிக்கமாட்டார். பாண்டிச்சேரிபோல் ஓர் இடத்தில அடைக்கலம் புகுவார்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-செப்-202113:00:55 IST Report Abuse
S.Baliah Seer பாரதியார், பாரதிதாசன் இருவருமே இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் தான். இவர்களுடைய கவிதைகள் முதலாளித்துவத்துக்கு எதிரானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X