அரசியல் செய்தி

தமிழ்நாடு

குறுந்தொழிலுக்கு கைகொடுக்க தயார்: மத்திய நிதியமைச்சர் உறுதியளித்ததாக தகவல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:''குறுந்தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து தர, மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்,'' என, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் தெரிவித்தார்.லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம், துணை தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்தி, மாநில தலைவர் விஜயராகவன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உட்பட
 குறுந்தொழிலுக்கு கைகொடுக்க தயார்: மத்திய நிதியமைச்சர் உறுதியளித்ததாக தகவல்

திருப்பூர்:''குறுந்தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து தர, மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்,'' என, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் தெரிவித்தார்.
லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம், துணை தலைவர் ஹரிஹரன் ராமமூர்த்தி, மாநில தலைவர் விஜயராகவன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உட்பட நிர்வாகிகள், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, சென்னை ஹில்டன் ஓட்டலில் நேற்று சந்தித்தனர்.லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர், திருப்பூரை சேர்ந்த மோகனசுந்தரம் கூறியதாவது:அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் குறுந்தொழில்களை வளர்ச்சி பெற செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள லகு உத்யோக் பாரதி முடிவு செய்துள்ளது; இதற்காக, தனி பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையறிந்து, குறுந்தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் அழைப்பு விடுத்தார்.'கொரோனாவுக்கு பின், தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்த, 50 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஆண்டு வர்த்தகம் மேற்கொள்ளும் குறுந்தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன.
தனிநபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கின்றனர். பெரும்பாலானோர், அரசு வழங்கும் உதவிகள்; அவற்றை எவ்வாறு பெறுவது என்று தெரியாமல் உள்ளனர். மத்திய அரசு, குறுந்தொழில்முனைவோருக்கு கைகொடுக்க வேண்டும்' என அமைச்சரிடம் தெரிவித்தோம்.'நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களிடமிருந்து விபரம் பெற்று, 'பி.எம்., ஸ்வநிதி' திட்டத்தில், தெருவோர வியாபாரிகளுக்கு கூட, குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குறுந்தொழில் முனைவோர் குறித்த உண்மை விவரங்களை மட்டும் சேகரித்து கொடுங்கள். அவர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கும். குறுந்தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என, அமைச்சர் தெரிவித்தார்.அமைச்சர் அறிவுறுத்திய படி, குறுந்தொழில் முனைவோர் விபரம் சேகரித்து வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X