அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அறிவிப்பு: பா.ஜ., கேள்வி

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:''கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் நிபந்தனை ஏதுமின்றி, கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்று, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி வழங்குகிறோம் என்று, தேர்தலின் போது தி.மு.க.,வினர் வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்த பின், தற்போது தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி

கோவை:''கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் நிபந்தனை ஏதுமின்றி, கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்று, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினர்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி வழங்குகிறோம் என்று, தேர்தலின் போது தி.மு.க.,வினர் வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்த பின், தற்போது தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். இதற்கு பெயர் தான் வாக்குறுதியா? இந்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே.நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னபோது 'தகுதி' குறுக்கே வரவில்லையே; முடியாது என்பதற்கு மற்றொரு பெயர் தான் தகுதியா? கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் நிபந்தனை ஏதுமின்றி, கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X