பணியில் இருந்த போலீஸ் மாரடைப்பால் பலியான சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணியில் இருந்த போலீஸ் மாரடைப்பால் பலியான சோகம்

Added : செப் 14, 2021
Share
அன்னுார்:பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த போலீஸ்காரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கோவை மாவட்டம், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை போலீசாக பணி புரிந்து வந்தவர் ஆண்டவர், 30. இவர் நேற்று முன்தினம் காலையில் கொண்டையம் பாளையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.நிதி திரட்டுவதில் சக போலீசாரும், நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உடல், திருப்பூர் மாவட்டம், நரியம்பள்ளியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., செல்வ நாகரத்தினம் தலைமையில் போலீசார், 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். ஆண்டவருக்கு திருமணமாகி, ஒரு வருடம் மட்டுமே ஆனது. 15 நாட்கள் ஆன பெண் குழந்தை உள்ளது.

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X