சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் பதுக்கல் விவகாரம்: இருவர் மீது வழக்குப்பதிவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:மூலனுாரில், தோட்டங்களில் சட்டவிரோதமாக, 36 யூனிட் ஆற்று மணலை பதுக்கி வைத்தது தொடர்பாக, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார், தட்டாரவலசு கிராமத்திலுள்ள இரு தோட்டங்களில் அமராவதி ஆற்றில் இருந்து மணல் திருடி பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது. தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின் படி, வருவாய், பொதுப்பணி, கனிம வளம்,

திருப்பூர்:மூலனுாரில், தோட்டங்களில் சட்டவிரோதமாக, 36 யூனிட் ஆற்று மணலை பதுக்கி வைத்தது தொடர்பாக, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார், தட்டாரவலசு கிராமத்திலுள்ள இரு தோட்டங்களில் அமராவதி ஆற்றில் இருந்து மணல் திருடி பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது. தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவின் படி, வருவாய், பொதுப்பணி, கனிம வளம், போலீசார் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இரு நாட்களுக்கு முன் தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பான அறிக்கையை சப்-கலெக்டருக்கு சமர்ப்பித்தனர்.இச்சூழலில், தாராபுரம் தாசில்தார் சைலஜா, மூலனுார் போலீசில் அளித்த புகாரின் பேரில், மணல் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக, கவுதமன் , 45; பன்னீர்செல்வம், 40 ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வருவாய்த்துறையினர் கூறுகையில், 'அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பன்னீர்செல்வம் தோட்டத்தில், 12 யூனிட், கவுதமன் தோட்டத்தில், 24 யூனிட் என, 36 யூனிட் மணல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது. இந்த ஆற்று மணல், கடந்த ஒரு ஆண்டு முதல், ஒன்றரை ஆண்டுக்குள் எடுத்திருக்க வேண்டும். தற்போது, இருவர் மீது புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X