பொது செய்தி

தமிழ்நாடு

'பறந்து' வரும் தொழிலாளர்கள்: திருப்பூர் நிறுவனங்கள் ஏற்பாடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்காக, ஒடிசாவில் இருந்து பயிற்சி முடித்த தொழிலாளர்கள், அதிகளவில் திருப்பூர் நோக்கி வர துவங்கியுள்ளனர்.மத்திய அரசின் 'தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,)' திட்டத்தில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் மையங்கள் ஒடிசாவில் ஏராளம் உள்ளன. இங்கு தொழிலாளர்களுக்கு, 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி

திருப்பூர்:பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்காக, ஒடிசாவில் இருந்து பயிற்சி முடித்த தொழிலாளர்கள், அதிகளவில் திருப்பூர் நோக்கி வர துவங்கியுள்ளனர்.மத்திய அரசின் 'தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,)' திட்டத்தில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் மையங்கள் ஒடிசாவில் ஏராளம் உள்ளன. இங்கு தொழிலாளர்களுக்கு, 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் திருப்பூரில் இயங்குகிறது. இம்மையம், பயிற்சி முடித்த ஒடிசா தொழிலாளரை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணியமர்த்துவது, தொழிலாளர் பிரச்னைகளை கண்டறிந்து சரி செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மைய மேலாளர் ராமசாமி கூறியதாவது: கொரோனா பரவல் குறைந்துள்ளதால், ஒடிசாவில் உள்ள மையங்களில் தையல் பயிற்சி மீண்டும் துவங்கியுள்ளது. பயிற்சி முடித்து, புதிய தொழிலாளர்கள் திருப்பூருக்கு வரத் துவங்கி விட்டனர். அடுத்த 15 நாட்களில், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயிற்சி மையங்களிலேயே தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடுகிறது. ஆர்டர் வருகை அதிகரிப்பால், திருப்பூர் நிறுவனங்களின் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் ரயிலில் திருப்பூர் வந்திறங்குகின்றனர். சில நிறுவனங்கள், தொழிலாளர்களை விமானத்தில் அழைத்துவர ஏற்பாடு செய்கின்றன. தற்போதைய சூழல்களை கருதி, கேரளா வழி பயணத்தை தவிர்க்க தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X