பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் வாழ்வது தான் உச்சபட்ச மதிப்பான செயல்: சத்குரு பேச்சு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:''உலகில் உயிர் வாழ்வது தான் உச்சபட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும், கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மத்திய காவலர் பயிற்சி மையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், உலக தற்கொலை
 உயிர் வாழ்வது தான் உச்சபட்ச மதிப்பான செயல்: சத்குரு பேச்சு

தொண்டாமுத்தூர்:''உலகில் உயிர் வாழ்வது தான் உச்சபட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும், கலாசாரத்தையும் உருவாக்க வேண்டும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், மத்திய காவலர் பயிற்சி மையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கலந்துரையாடினர்.சத்குரு பேசியதாவது:உங்கள் சொந்த புத்திசாலித்தனமே, உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை. உலகில் உயிர் வாழ்வது தான் உச்சபட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும், கலாசாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.யோகா வாயிலாக, ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது, சமூகம் கட்டமைத்துள்ள வெற்றிக் கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்கு சிக்கி, உணர்ச்சி சமநிலையை இழக்காமல் பாதுகாக்கும்.நாட்டில் இருக்கும் சட்டங்கள் வாயிலாக, சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால், யோகா பயிற்சியால், ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.சிறைகளில், கலை மற்றும் கலாசார அம்சங்களை ஊக்குவிப்பதன் வாயிலாக மென்மையான சூழலை உருவாக்கி, சிறைக் கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X