சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரக்கடத்தல் விவகாரம்: வாலிபர் கடத்திக் கொலையா?

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சேலம் அருகே செம்மர கட்டை கடத்தல் விவகாரத்தில் கூலி தொழிலாளி ஒருவரை கடத்திச் சென்ற நிலையில் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து, சேலம் மாவட்ட போலீசார், இதுவரை மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜா, 32. இவர், தனது

ஆத்தூர்: சேலம் அருகே செம்மர கட்டை கடத்தல் விவகாரத்தில் கூலி தொழிலாளி ஒருவரை கடத்திச் சென்ற நிலையில் அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து, சேலம் மாவட்ட போலீசார், இதுவரை மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜா, 32. இவர், தனது மனைவி பிரியாவுடன் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அப்போது செம்மரக்கடத்தல் ஏஜென்டாக உள்ள, ஆத்தூர் அடுத்த கும்பபாடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ், செல்வம், ஆகியோர் ராஜாவை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ராஜாவின் மைத்துனர் சத்யராஜிடம் போனில் தொடர்பு கொண்ட தர்மராஜ், தனக்கு சொந்தமான செம்மரக்கட்டைகளை திருடிச் சென்று விற்பனை செய்துள்ளனர். அதற்குரிய தொகையாக, 6 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லை எனில் ராஜாவை கொன்று விடுவோம் எனக் கூறியுள்ளார்.
ராஜா இவர்களிடம் இருந்து தப்பியபோது, வாழப்பாடி, புதுப்பட்டியை சேர்ந்த ராமசாமி கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிகிறது. தகவலறிந்த வாழப்பாடி போலீசார் கிணற்றிலிருந்து ராஜாவின் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
ராஜாவின் மனைவி பிரியா வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். சேலம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய வாழப்பாடி பகுதியை சேர்ந்த, ஜீவா, 25, திலீப், 40, மற்றும் கருமந்துறை கார்த்தி, 30, ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செம்மரக்கடத்தல் ஏஜென்ட் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X