பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் : வழிகாட்டி நெறிமுறை வெளியீடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை:நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய கூடங்கள், சந்தைகள், நவீன நுாலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்'

சென்னை:நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாய கூடங்கள், சந்தைகள், நவீன நுாலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்' என்ற, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 300 கோடி ரூபாய் மதிப்பில், நீர் நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல் போன்ற, அடிப்படை வசதிகள் உடைய, 'நமக்கு நாமே திட்டம்' செயல்படுத்தப்படும்.நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், 100 கோடி ரூபாய் மதிப்பில், 'நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்' சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் செயல்படுத்தப்படும்;மற்ற மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், ஏழு நகராட்சிகள், 37 பேரூராட்சிகளிலும், இத்திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவித்தார்.இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X