பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டுபுழுவியல் படிப்பை நிறுத்த கூடாது'

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை:'பட்டுப் புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது; முதல்வர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு 2011ல் துவங்கப்பட்டது. 2014ல் இப்படிப்பு,மேட்டுப்பாளையத்தில்உள்ள வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சிமையத்திற்கு மாற்றப்பட்டது.அங்கு பட்டுப்புழு வளர்ப்பு

சென்னை:'பட்டுப் புழுவியல் படிப்பை நிறுத்தக்கூடாது; முதல்வர் பேசி சிக்கலை தீர்க்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு 2011ல் துவங்கப்பட்டது. 2014ல் இப்படிப்பு,மேட்டுப்பாளையத்தில்உள்ள வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சிமையத்திற்கு மாற்றப்பட்டது.அங்கு பட்டுப்புழு வளர்ப்பு கூடங்கள், மல்பெரிச்செடி தோட்டம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதனால், பட்டுப் புழுவியல் படிப்புக்கு, மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.பட்டுப் புழுவியல் படிப்பு முடக்கப்படுவதை கண்டித்து, வனவியல்கல்லுாரியில், அப்படிப்பை படித்து வரும் மாணவர்கள் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.பல்கலை நிர்வாகம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால், மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.முதல்வரும், அமைச்சரும் இதில் தலையிட்டு, பட்டுப் புழுவியல் பட்டப் படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது மற்றொரு அறிக்கை:தமிழகத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் வாயிலாக, 28 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்பதால், தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். சிறப்பு முகாம்கள்வாரா வாரம் நடத்தவேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X