அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க., நிதியுதவி

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை;நீட் தேர்வு பயம் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி, கூழையூரை சேர்ந்த சிவகுமாரின் இரண்டாவது மகன் தனுஷ், தி.மு.க.,வின்,

சென்னை;நீட் தேர்வு பயம் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குடும்பத்திற்கு, அ.தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி, கூழையூரை சேர்ந்த சிவகுமாரின் இரண்டாவது மகன் தனுஷ், தி.மு.க.,வின், 'நீட் தேர்வுக்கு விலக்கு' என்ற பொய் வாக்குறுதியை நம்பி உள்ளார்.பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத அரசாக, இந்த அரசு உள்ளதை எண்ணி, மனம் நொந்து தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். அவரது மரணத்துக்கு, தி.மு.க.,வும், அதன் அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவி, குடும்பத்தில் தகுதி உடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தின் துயரத்தில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.எந்த துயரம் வந்தாலும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளை தாண்டி, ஜெயலலிதா வழியில் பீடுநடை போட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற போராட்ட குணத்தை, மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாறாக பெற்றோருக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை, மாணவர்கள் வழங்கி விடக்கூடாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
14-செப்-202118:13:09 IST Report Abuse
R VENKATARAMANAN செத்தவன் குடும்பத்துக்கு லச்சக்கணக்கில் பணம் கொடுப்பது விளம்பத்துக்காகவும் ஓட்டுவாங்கவுமே கொடுப்பது ஆகும். பள்ளிகள் சிறப்பாக நடக்கிறதா மாண்வர்கள் கவனிப்பு திறன் , ஆசிரியர்கள் தகுதி ஆகியவற்றை சர்க்கார் தொடர்சியாக கவனிக்க வேண்டும். திறன் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும். அந்த பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து அந்த மாணவனின் முன்னேற்றத்தில் ஆசியரின் பங்கு நிர்ணயக்கப்படவேண்டும். செத்தால் பணம் கொடுக்கும் வழக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X