பொது செய்தி

தமிழ்நாடு

பந்தலுார் பகுதியில் தொடருது கனமழை

Added : செப் 14, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் பகுதியில் சாலையோர மரத்தில் இருந்து சேறு கலந்த மண் அருவியாக கொட்டி வருவதால், மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொன்னானி ஆற்றில் வெள்ளபெருக்கு
 பந்தலுார் பகுதியில்  தொடருது கனமழை

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் பகுதியில் சாலையோர மரத்தில் இருந்து சேறு கலந்த மண் அருவியாக கொட்டி வருவதால், மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பொன்னானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவி வருவதால், வாகன ஓட்டுனர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, ஆபத்தான இடங்களில் உள்ள மக்கள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க, வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X