அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது: கனிமொழி

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''மாணவர்களின் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியை தரக்கூடியது,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர்கனிமொழி கூறினார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் நேற்று நடந்தது.இதில், 500 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்கி கனிமொழி

சென்னை:''மாணவர்களின் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியை தரக்கூடியது,'' என, தி.மு.க., மகளிர் அணி செயலர்கனிமொழி கூறினார்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நகரில் நேற்று நடந்தது.இதில், 500 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்கி கனிமொழி பேசியதாவது:மாணவர்களின் உயிரிழப்பு என்பது அனைவருக்கும் வலியைத் தரக்கூடியது. இதை வைத்து அரசியல் செய்வது சரியானது அல்ல.நீட் தேர்வு வாயிலாக நடைபெறும் அநியாயமான சூழலை, நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து உணர்த்துவோம். நீட் தேர்வு இல்லாமலேயே, திறமையான டாக்டர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகி உள்ளனர். வாய்ப்பு அற்றவர்களிடம் இருந்து, வாய்ப்பை பறிப்பது தான் நீட் தேர்வு.நீதிமன்றம் மறுத்த விஷயங்கள், மத்திய அரசு மறுத்த பல விஷயங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதே போல, நீட் தேர்வுக்கும் சரியான முடிவு எட்டப்படும். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம். புதிய கல்வி கொள்கை அனைவருக்குமான கல்வி யை உடைத்து விடும்; கல்வியை பின்னோக்கி செலுத்தி விடும். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தி.மு.க., குரல் கொடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-202110:41:17 IST Report Abuse
Hari மாணவி அனிதா மரணத்தை வைத்து திமுக செய்யாத அரசியலையா இப்போது எதிர்க்கட்சிகள் செய்கின்றன. இறப்பை வைத்து அரசியல் செய்வது தான் திமுகவின் வழக்கமே என்பதை மறந்துவிட்டார் போல. இந்நேரம் நீங்கள் எதிர்கட்சியாக இருந்திருந்தால் இன்னைக்கு தமிழகத்தை இன்று உண்டு இல்லை என்று செய்தீருப்பீர்களே ! உங்களுக்கு ஆதரவாக ஊடகங்களும் காரசார விவாதங்கள் நடத்திருக்கும். பாவம் இப்போது அந்த வாய்ப்பு இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X