சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் அச்சம்: அரியலூரில் மாணவி தற்கொலை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பெரம்பலூர்: நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு முடிவு குறித்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). இவருக்கு பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் 2019
NEET, Student, Suicide, Ariyalur, நீட், தேர்வு, அச்சம், அரியலூர், மாணவி, தற்கொலை

பெரம்பலூர்: நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு முடிவு குறித்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). இவருக்கு பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் 2019 முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அப்போது நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இந்தாண்டும் (2021) நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த தனுஷ், நீட் தேர்வு நடக்க இருந்த செப்.,12ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கிரீன் கார்டனில் 12ம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செப்.,13) முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மன அழுத்தத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மாலையில் அரியலூரில் உள்ள தனது மனைவியை அழைத்துவர அவரது தந்தை சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்ப வந்த போது வீட்டினுள் மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மாணவியின் சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு மாணவியின் பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளனர். நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதாமல் மாணவரும், தேர்வு எழுதிய மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
14-செப்-202119:55:26 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நீட் தேர்வு பயத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தாதீர்கள். 1000 வி எ ஓ க்கு 100000 பேர் நான்றாக படித்து எழுதுவார்கள் வெற்றி 99000 பேருக்கு இல்லை
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14-செப்-202112:10:30 IST Report Abuse
Svs Yaadum oore இந்திய முழுக்க ஒரே பாடத்திட்டம் வேண்டுமாம். செய்ய வேண்டியது தானே.எவன் வேண்டாம்னு தடுத்தான்? இங்குள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் பயிற்சி தேர்வான TET தேர்வில் ஒரு சதம் ஆசிரியர் கூட தேர்ச்சி கிடையாது. இவர்களை வைத்து எப்படி இந்தியா முழுக்க ஒரே பாட திட்டம்? அவர்களுக்கே ஒன்றும் தெரியாது. கேரளா முதல்வர் NEET தேர்வுக்கு வரவேற்பு. ஐந்து மாதங்களுக்கு முன்பே காரோண காலத்தில் கேரளா மாணவரை நீட் தேர்வுக்கு தயாராக சொன்னார். ஆந்திர முதல்வர் அணைத்து பள்ளிகளும் CBSE, ICSE அளவுக்கு தரம் உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவு. அணைத்து பள்ளிகளும் NEP புதிய கல்வி கொள்கை அமல்படுத்த உத்தரவு. முதல் கட்டமாக நாடு நெடு திட்டத்தில் 15,715 அரசு பள்ளிகள் 3,669 கோடி செலவில் தரம் உயர்த்த பட்டது . இரெண்டாம் கட்டத்தில் 12,663 பள்ளிகள் 4,535.74 கோடிகள் செலவில் , மூன்றாம் கட்டத்தில் 24,900 பள்ளிகள் ஆந்திராவில் தரம் உயர்த்தப்படும் . அவர் முதல்வர் .
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14-செப்-202111:36:53 IST Report Abuse
Svs Yaadum oore நீட் தேர்வு தடை செய்வதில் தவறு இல்லையாம் . ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று தேர்தல் வாக்குறுதி . அதைத்தான் மாணவர்கள் நம்பினார்கள். சொன்னது போல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதுதானே ? . எவனாவது வேண்டாம்னு சொன்னானா ? . நீட் தேர்வு நீக்க முடியாது என்று இன்றுவரை சொல்வது அதற்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய புகழ் பெற்ற காங்கிரஸ் வக்கீல் . அவர்களுடன் என்ன கூட்டணி ? . போய் அவர்களிடம் கேள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X