நீட் அச்சம்: அரியலூரில் மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் அச்சம்: அரியலூரில் மாணவி தற்கொலை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (22)
Share
பெரம்பலூர்: நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு முடிவு குறித்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). இவருக்கு பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் 2019
NEET, Student, Suicide, Ariyalur, நீட், தேர்வு, அச்சம், அரியலூர், மாணவி, தற்கொலை

பெரம்பலூர்: நீட் தேர்வு எழுதிய அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு முடிவு குறித்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் கூழையூரைச் சேர்ந்த மெஷின் ஆப்பரேட்டர் சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). இவருக்கு பல் மருத்துவத்துக்கு இடம் கிடைத்தபோதும் எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் 2019 முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அப்போது நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், இந்தாண்டும் (2021) நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த தனுஷ், நீட் தேர்வு நடக்க இருந்த செப்.,12ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கிரீன் கார்டனில் 12ம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செப்.,13) முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மன அழுத்தத்துடன் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மாலையில் அரியலூரில் உள்ள தனது மனைவியை அழைத்துவர அவரது தந்தை சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்ப வந்த போது வீட்டினுள் மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மாணவியின் சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு மாணவியின் பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளனர். நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதாமல் மாணவரும், தேர்வு எழுதிய மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X