பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு நன்கொடை: 6 அமைப்புகளுக்கு தடை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 6 அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு, 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) கீழ் உரிமம் வழங்கப்படுகிறது. மதமாற்றம் அல்லது நிதி முறைகேட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கிறிஸ்தவ நற்செய்தி
NGO, Foriegn Fund, Restrict, அரசு சாரா அமைப்புகள், வெளிநாடு, நன்கொடை, தடை

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 6 அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு, 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) கீழ் உரிமம் வழங்கப்படுகிறது. மதமாற்றம் அல்லது நிதி முறைகேட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கிறிஸ்தவ நற்செய்தி குழுக்கள், இஸ்லாமிய அறக்கட்டளைகள் உள்ளிட்ட 6 அமைப்புகளுக்கான எப்.சி.ஆர்.ஏ., உரிமம் 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எப்.சி.ஆர்.ஏ., விதிமீறலை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஒன்றரை மாதங்களில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு எப்.சி.ஆர்.ஏ., உரிமம் நிறுத்திவைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


கேரளாவின் சன்னி முஸ்லிம் தலைவர் ஷேக் அபூபக்கர் அகமதுவுடன் தொடர்புடைய ஒரு பெரிய அரசு சாரா அமைப்புக்கு வழங்கப்பட்ட எப்.சி.ஆர்.ஏ., உரிமம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. நிதிமுறைகேடு, உண்மைகளை தவறாக சித்தரித்தல், வருடாந்திர எப்.சி.ஆர்.ஏ., ரிட்டன் தாக்கல் செய்யாதது ஆகியவற்றுக்காக இதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது.

லக்னோவைச் சேர்ந்த அல் ஹசன் கல்வி மற்றும் நல்வாழ்வு அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் கடந்த ஜூலை இறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டாய மதமாற்ற செயல்பாடுகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ரஸ் பவுன்டேஷன், ஹரியானாவை சேர்ந்த மேவாத் கல்வி நல அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் எப்.சி.ஆர்.ஏ., உரிமம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-202123:03:59 IST Report Abuse
Aarkay அப்படியே அந்த அல்லேலூயா அமைப்புகளையும் கவனியுங்கள். பணத்தால் அடித்து மதமாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. மதமாற்றம், charity என கணக்கு காட்டி இவர்கள் அடிக்கும் கொள்ளைகளுக்கு அளவே இல்லை. முகவரி இல்லாதவர்களெல்லாம் அயல்நாட்டு நிதியுடன் தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள்.
Rate this:
Cancel
ravikumark - Chennai,இந்தியா
14-செப்-202119:05:15 IST Report Abuse
ravikumark Stop all funds going to churches from foreign countries
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
14-செப்-202118:52:46 IST Report Abuse
r ravichandran அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு வரும் வெளிநாட்டில் இருந்து வரும் நிதி அனைத்தும் கனடா நாட்டில் இருந்து காசிஸ்தான் தனி நாடு கேட்கும் சீக்கிய அமைப்புகளில் இருந்து வருகிறது. இது மோடி ஆட்சியில் கட்டுபடுத்த பட்டுள்ளது. இது டெல்லில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் உள்ள நிறைய NGO க்களுக்கு , சீனா, பாகிஸ்தான் , மலேசியா போன்ற இந்தியா எதிர்ப்பு நாடுகள் டிரஸ்ட் என்ற அமைப்புகளின் மூலமாக , இந்தியாவில் அமைதியை குலைக்க தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கின்றன. இதை மோடி அரசு தடுத்து நிறுத்த முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X