திருப்பூர் போலீஸ் எஸ்.பி., ஜீப் விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் போலீஸ் எஸ்.பி., 'ஜீப்' விபத்து

Added : செப் 14, 2021
Share
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., செஷாங் சாய், பணி நிமித்தமாக, போலீஸ் 'ஜீப்' பில் சென்னைக்கு சென்றிருந்தார். பின், திருப்பூர் திரும்பும் போது, தனது தந்தையையும், உடன் அழைத்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.இச்சூழலில், அதிகாலை, 3:00 மணியளவில் சேலம் - கோவை பைபாஸ், பல்லேகவுண்டன் பாளையம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் இருந்த மைல் கல் மீது மோதி,

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., செஷாங் சாய், பணி நிமித்தமாக, போலீஸ் 'ஜீப்' பில் சென்னைக்கு சென்றிருந்தார். பின், திருப்பூர் திரும்பும் போது, தனது தந்தையையும், உடன் அழைத்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இச்சூழலில், அதிகாலை, 3:00 மணியளவில் சேலம் - கோவை பைபாஸ், பல்லேகவுண்டன் பாளையம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டோரம் இருந்த மைல் கல் மீது மோதி, ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், எஸ்.பி, அவரது தந்தை, போலீஸ் கன்மேன் மற்றும் டிரைவர் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X