பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் மட்டும்: ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண்களுக்கு வேலை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஓசூர்: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது.அந்த வகையில், பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை, ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், 'ஓலாவின் ப்யூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். அங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
Women Only, Ola, eScooter Factory, Bhavish Aggarwal, பெண்கள் மட்டும், மகளிர் மட்டும், ஓலா, தொழிற்சாலை, 10000 பெண்கள், வேலை,

ஓசூர்: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய பாணியை ஓலா நிறுவனம் கையாளத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை, ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், 'ஓலாவின் ப்யூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். அங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



இதுகுறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையையே மேம்படுத்தும்' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு பெண்கள் முன்னேற்றம் என்று நம் குடும்ப வாழ்வியலை சீர் குலைக்கிறார்கள்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-செப்-202120:35:48 IST Report Abuse
sankaranarayanan பெண்களுக்கு மட்டும் ஓலா தொழிற்ச்சாலை என்றால் ஆணைகளுக்கு மட்டும் டாஸ்மார்க் தொழிற்ச்சாலை என்று ஒன்று எப்போதும் இருக்கிறதே என்றுதான் சந்தோஷப்படவேண்டும். இனி இந்த அரசாங்கத்தால் அதிக இடங்களில் டாஸ்மார்க் கடைகளை திறப்பதும் - அங்கே பார் திறக்க அனுமதி கொடுப்பதும் - ஆணைகளுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் கட்சி பிரமுகர்கள் இன்னும் பலருக்கு, டிஸ்டிலரி தொழிற்ச்சாலை துவங்க அனுமதிப்பதும் - அவர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்குவதும்தான் , பிறகு அதைக்கடனை முழுவதும் தள்ளுபடி செய்வதும்தான் தீர வீர செயலாகும்
Rate this:
Cancel
Ramakrishnan R - kalpakkam,இந்தியா
14-செப்-202120:15:43 IST Report Abuse
Ramakrishnan R இது ஆண்களுக்கு எதிரான , பாரபட்சமான நடவடிக்கை. இன்றும் குடும்பங்களில் பணச்சுமை ஆண்களின் மீதுதான் விழுகிறது. சினிமா, நாடகம், கவிதைகளில் வேண்டுமானால் பெண்களை ஏற்றி பேசலாம். ஆனால் ஆண்கள்தான் குடும்ப பாரத்தை சுமப்பவர்கள். ஆண்கள் வேலையின்றி வீட்டில் இருந்தால் தண்டச்சோறு என்று திட்டுவார்கள். ஆனால் பெண்களை தண்டச்சோறு என்று யாரும் திட்டுவதில்லை. முக்கிய முடிவுகளை உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்க கூடாது, அறிவுப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை மிக கேவலமாக நடத்துகிறார்கள் , இங்கே ஆண்களை சிறுமைப் படுத்துகிறார்கள். இது வேறு வகையான, மாற்று ஆப்கானிஸ்தானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X