ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நல குறைவு; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
யாங்கூன்: மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்தது.ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உட்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Aung San Suu Kyi, Unwell, skips, Myanmar, trial hearing, ராணுவம், ஆங் சான் சூகி, உடல்நல குறைவு, வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு

யாங்கூன்: மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்தது.

ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உட்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.


latest tamil newsஇந்நிலையில், இந்த வழக்கு நேற்று (செப்.,13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஆங் சான் சூகி, தான் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து காரில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கோர்ட் அறைக்குள் நுழைந்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்டார். திடீரென தலை சுற்றியதால் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்தார். தனக்கு உடல் நலம் சரியில்லை என அவர் தனது வக்கீல்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, வக்கீல்கள் நீதிபதியிடம் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தனர். நீதிபதிகள் அதை ஏற்று வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
14-செப்-202120:59:21 IST Report Abuse
Akash Poor lady...she will die before trial...some countries don't deserve democracy...be a Roman in Rome ...otherwise see the end?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
14-செப்-202114:06:37 IST Report Abuse
vpurushothaman பாவம் இந்த ஜனநாயகவாதியை சிறையில் அடைத்தே வதைக்கிறார்கள். ஆனால் தியாகம் வீண் போகாது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202112:34:33 IST Report Abuse
Ramesh Sargam ஆப்கான், பாக்கிஸ்தான், வடகொரியா போன்று இந்த மியான்மரும் ஒரு பாவப்பட்ட தேசம். முதல் இரண்டு தீவிரவாதிகளின் கையில். முன்றாவது ஒரு 'சர்வாதிகாரி சிறுவனின் கையில்'. மியான்மார் ராணுவ 'தீவிரவாதிகளின் கையில்'. இந்த ஆங் சான் சூகிக்கு மற்றும் மியான்மார் மக்களுக்கு என்றுதான் 'சுதந்திரமோ' அந்த கொடூர ராணுவத்திடமிருந்து?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X