கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் உத்தரவு வாபஸ்: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பாலிசி விபத்து வழக்கை விசாரித்த ஈரோடு தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை,
Bumper To Bumper, Insurance, Chennai HC, சென்னை, ஐகோர்ட், உயர்நீதிமன்றம், பம்பர் டூ பம்பர், வாபஸ்

சென்னை: புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலிசி விபத்து வழக்கை விசாரித்த ஈரோடு தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். ஈரோடு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, செப்.,1 முதல் புதிய வாகனங்களுக்கு, பம்பர் டூ பம்பர் காப்பீட்டு பாலிசியை கட்டாயமாக்கவும், ஓட்டுனர், பயணியர் என, அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு பாலிசி இருக்க வேண்டும் என்றும், நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.


latest tamil news


இதையடுத்து, ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் எஸ்.அருண்குமார் ஆஜராகி, ''நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, காப்பீட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. ''இவ்வழக்கில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலை சேர்க்க வேண்டும். ''ஆணையத்தின் உரிய ஒப்புதல் பெற்ற பின், கணினியில் உரிய மாறுதல் செய்ய, 90 நாட்கள் அவகாசம் வேண்டும்,'' என்றார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில், ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர், போக்குவரத்து இணை கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், ஓட்டுனர்கள், பயணியரின் நலன்களை பாதுகாக்கும் வகையில், உடனடியாக சுற்றறிக்கை பிறப்பித்த அரசின் நடவடிக்கைக்கும், நீதிபதி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், காப்பீட்டு நிறுவனங்கள் அமைப்பின் கோரிக்கையை ஏற்று 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் உத்தரவை திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்றும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களுரு இந்த வாகன காப்பீடு ஒன்றுக்கும் உதவாத திட்டம், பெரும்பாலும் காப்பிடு இழப்பு பெறுவது மிக கடினமான நடைமுறையாக உள்ளது, என்னை பொருத்த வரை தண்ட செலவு
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
14-செப்-202122:00:43 IST Report Abuse
R. Vidya Sagar இனியாவது கோர்ட்கள் வரம்பு மீறி நடப்பதை விட வேண்டும்.
Rate this:
Cancel
14-செப்-202118:36:45 IST Report Abuse
ஆரூர் ரங் மத்திய அரசும் 60 70 ஆண்டுகளாக. CBSE கேந்திரிய வித்யாலய, ஐஐடி, எய்ம்ஸ், ஜிப்மர் என ஏகப்பட்ட கல்வி நிலையங்களை நடத்துகிறது. அவற்றுக்கு மாநில அரசின் விதிகள் பொருந்தாது . மாநில அரசின் மருத்துவக் கல்லூரி செலவிலும் 60 விழுக்காடு மத்திய அரசுதான் வழங்குகிறது. அப்போதெல்லாம் மத்திய அரசின் தலையீடு இனித்தது. 😅 இப்போ எதிர்கட்சியாக இருப்பதால்😡 வழக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X