நவீன ஏவுகணை சோதனை: சாதித்தது வட கொரியா

Added : செப் 14, 2021
Share
Advertisement
சியோல் : கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நேற்று நடத்தியது.கிழக்கு ஆசிய நாடான வட கொரியா இரண்டு ஆண்டுகளாக 1,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து வந்தது.இந்த ஏவுகணையின் சோதனை வட கொரிய ராணுவ தலைமை தளபதி பாக் ஜாங் சோன் முன்னிலையில் நடந்தது. ஒரு டிரக்கில் இருந்து பாய்ந்த
 நவீன ஏவுகணை சோதனை: சாதித்தது வட கொரியா


சியோல் : கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நேற்று நடத்தியது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா இரண்டு ஆண்டுகளாக 1,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து வந்தது.இந்த ஏவுகணையின் சோதனை வட கொரிய ராணுவ தலைமை தளபதி பாக் ஜாங் சோன் முன்னிலையில் நடந்தது. ஒரு டிரக்கில் இருந்து பாய்ந்த ஏவுகணை, வானில் 126 நிமிடங்கள் நீள் வட்டமாக பல முறை சுற்றி வந்து, இலக்கை வீழ்த்தி, கடலில் விழுந்தது.இதையடுத்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக கூறி, அதன் புகைப்படங்களை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், ஏவுகணை சோதனையை நேரில் காண வரவில்லை.

இதற்கிடையே வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை குறித்து, அண்டை நாடான தென் கொரியா மற்றும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளன.இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் துாதர்கள் இன்று டோக்கியோவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பை கைவிட்டால் அதன் மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே 2019ல் ஒப்பந்தம் கையொப்பமானது.ஆனால் வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை முற்றிலுமாக கைவிடாததால், அதன் மீதான பொருளாதார தடை நீடிக்கிறது. இதனால் வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X