பொது செய்தி

இந்தியா

"ஊழல் செய்தவர்கள் சிறையில் உள்ளனர்"- பிரதமர் மோடி விளாசல்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
அலிகார்: தற்போதைய மத்திய அரசு மக்கள் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. ஆனால் முந்தைய ஆட்சிக்கார்கள் நாட்டை கொள்ளை அடித்தனர். இதனால் அதில் பலர் சிறையில் உள்ளனர். உபி.,மாநிலத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். மேற்கு உ.பி.,யில் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட் இனத்தை சேர்ந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில்
பிரதமர் மோடி, நரேந்திர மோடி, அலிகார்க், பல்கலை, உத்தரபிரதேசம், யோகி, வளர்ச்சி, மோடி, பிரதமர்,

அலிகார்: தற்போதைய மத்திய அரசு மக்கள் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. ஆனால் முந்தைய ஆட்சிக்கார்கள் நாட்டை கொள்ளை அடித்தனர். இதனால் அதில் பலர் சிறையில் உள்ளனர். உபி.,மாநிலத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

மேற்கு உ.பி.,யில் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட் இனத்தை சேர்ந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. அலிகார் மாவட்டத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் 395 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட உள்ளன. இந்த பல்கலையின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.


latest tamil news
புதிய அடையாளத்தை நோக்கி


இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:
பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, இன்று பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நாடு மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த உலகமும், இந்தியாவில் இருந்து போர்கப்பல்கள், டுரோன்கள், விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன குண்டுகள் உற்பத்தி செய்யப்படுவதை பார்க்கின்றன. பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியில், இந்தியா புதிய அடையாளத்தை நோக்கி முன்னேறுகிறது. ஒரு காலத்தில் நிர்வாகத்தை குண்டர்கள் கையில் எடுத்தனர். ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி இருந்தது. தற்போது, அவர்கள் சிறையில் உள்ளனர்.


latest tamil newsஉ.பி., வளர்ச்சிக்கு மத்திய அரசும், யோகி அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி உள்ளது. இன்று உலகம் மற்றும் நாட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை உ.பி., கவர்ந்துள்ளது. இதற்கான சரியான சூழலை உ.பி., அரசு உருவாக்கி உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கி யோகி அரசு செயலாற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
14-செப்-202122:58:34 IST Report Abuse
Rajas எடியூரப்பா, பெல்லாரி ரெட்டி சகோதரர்கள், ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, சிவராஜ் சிங்க் சவுகான், முகில் ராய், ரமேஷ் பொக்கிரியால் இவர்கள் எல்லாம் தேசத்திற்கு தொண்டு செய்தவர்களா. இவர்கள் மீது என்ன குற்றசாட்டு இருக்கிறது. இவர்கள் இப்போது எந்த கட்சியில் இருக்கிறார்கள். இவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
14-செப்-202122:53:36 IST Report Abuse
Rajas முகில் ராய் மற்றும் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா என்ற இருவரும் சாரதா சீட் பண்ட் கேசில் மாட்டி விசாரணைக்கு உள்ளவர்கள். பின்னர் இவர்கள் பிஜேபியில் சேர்ந்த பிறகு அந்த விசாரணை மற்றும் குற்றச்சாட்டுக்கள் நீர்த்து போகும் படி செய்யப்படுகின்றன. ஒருவேளை பிஜேபியில் சேர்ந்தால் முன்பு செய்த ஊழல்கள் மக்களின் சேவையாகி விடுமோ.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
14-செப்-202122:01:39 IST Report Abuse
spr பொதுவாக மோடி உண்மையைத்தான் சொலுவார் என்று நம்புவருக்கு இது பெரிய அதிர்ச்சி கரும் கருத்து சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் என எல்லா அம்சங்களும் அரசியலுக்குத் தேவைப்படுகின்றன. இதில் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாக இருக்க வேண்டும் என்பதும் இப்போது தகுதிக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ‘கிரிமினல் மக்கள் பிரதிநிதி’களின் எண்ணிக்கை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாஜகவும் அதற்கு விதிவிலக்கல்ல "‘ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவரை அவரைக் குற்றவாளி என்று கருதக்கூடாது ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டனை பெறக்கூடாது" என்பது போன்ற தவறான இந்திய நீதிமன்ற அணுகுமுறைகள் இந்தக் குற்றவாளிகள் அரசியலில் பெரும் பதவி வகிக்க உதவுகிறது உண்மையிலேயே மோடி நேர்மையானவராக இருந்தால் "குறைந்த பட்சம் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட தீவிரக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வழக்கு நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்’ செய்வாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X