பொது செய்தி

இந்தியா

71% குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன்; 3-வது அலையால் பாதிப்பு இல்லை: ஆய்வில் தகவல்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் 3வது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என, கூறப்பட்டு வந்த நிலையில், சண்டிகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 71 சதவீத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.இந்தியாவில் வரும் அக்டோபரில் கோவிட் 3வது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம்
children, antibodies, sero survey, PGIMER, Director, நோய் எதிர்ப்பு திறன், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி, கோவிட், 3வது அலை

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் 3வது அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என, கூறப்பட்டு வந்த நிலையில், சண்டிகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 71 சதவீத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபரில் கோவிட் 3வது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், 3வது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழுவும் கூறியுள்ளது.

இந்நிலையில் சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய செரோ ஆய்வில், 71 சதவீத குழந்தைகளின் மாதிரிகளில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., இயக்குநர் டாக்டர் ஜெகத் ராம் கூறுகையில், 'கோவிட் தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். குழந்தைகளுக்கு இன்னமும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. பிஜிஐஎம்இஆர் சார்பில் சண்டிகரில் 2,700 குழந்தைகளிடையே செரோ சர்வே நடத்தப்பட்டது. அவர்களில் 71 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, 3வது அலை குழந்தைகளைத் தாக்காது' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X