பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி முதல்வர் கையால் பட்டா கிடைத்தும் பலனில்லை: தில்லுமுல்லு அதிகாரிகளால் திண்டாடும் கிராம மக்கள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஈரோடு: மொடக்குறிச்சி, பூந்துறையில் ஒரே இடத்தில் வெவ்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பெண் புரோக்கர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை ஒப்படைக்க கோரி மக்கள் முறையிட்டனர்.மொடக்குறிச்சி, பூந்துறையில் பட்டா பெற்ற, 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்த எங்களுக்கு, 2018 மே, 13ல்

ஈரோடு: மொடக்குறிச்சி, பூந்துறையில் ஒரே இடத்தில் வெவ்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பெண் புரோக்கர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை ஒப்படைக்க கோரி மக்கள் முறையிட்டனர்.


மொடக்குறிச்சி, பூந்துறையில் பட்டா பெற்ற, 100க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்த எங்களுக்கு, 2018 மே, 13ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி கையால், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 82 பேருக்கு பட்டா வழங்கினர். இடத்தை இதுவரை ஒப்படைக்காமல், இதே இடத்துக்கு வேறு நபர்களுக்கும் பட்டா தந்துள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக புரோக்கர் பழனியம்மாள் பணத்தை பெற்று கொண்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அதிகாரிகளும் உடந்தை. ஆதிதிராவிடர் நலத்துறை, மொடக்குறிச்சி தாலுகா அதிகாரிகளிடம் இதுகுறித்து விபரம் கேட்டால், தவறு வெளியே தெரிந்துவிடும் என்று, எங்களை விரட்டுகின்றனர். பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும். புரோக்கர் பழனியம்மாள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் குமரன், அதிகாரிகள் மக்களிடம் சமாதானம் பேசவே, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X