பொது செய்தி

தமிழ்நாடு

1 ஏக்கர் நிலத்தை அபகரித்த சகோதரன்; நடக்க முடியாத 'நட'ராஜன் வேதனை

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஈரோடு: அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் வந்து, தொழிலாளி முறையிட்டார்.அந்தியூரை அடுத்த சங்கராபளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 58, கட்டட தொழிலாளி. மனைவி, மகள் உள்ளனர். மூன்றாண்டுக்கு முன் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்தார். இதில் முதுகு தண்டுவடம் உடைந்து, இடுப்புக்கு கீழ் செயலிழந்தது. தற்போது படுத்த படுக்கையில் உள்ளார்.

ஈரோடு: அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் வந்து, தொழிலாளி முறையிட்டார்.


அந்தியூரை அடுத்த சங்கராபளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 58, கட்டட தொழிலாளி. மனைவி, மகள் உள்ளனர். மூன்றாண்டுக்கு முன் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழுந்தார். இதில் முதுகு தண்டுவடம் உடைந்து, இடுப்புக்கு கீழ் செயலிழந்தது. தற்போது படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் மனைவி, மகள் பிரிந்து சென்றுவிட்டனர். தாயாருடன் வசிக்கிறார். இந்நிலையில் தனது குடும்ப சொத்தில், சகோதரர் ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு கொடுக்க நடராஜன் வந்தார். வாகனத்தில் படுத்த படுக்கையாக கிடந்த நடராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜியிடம் மனு வழங்கி கூறியதாவது: எனது நிலையை பயன்படுத்தி, நிலத்தை அபகரித்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். என்னால் தாயாரும் சிரமப்படுகிறார். எனவே என்னை அரசு காப்பகத்தில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். உடல் நலம் கருதி, நிதியுதவி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நடராஜனுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X