பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு லாரியை வழிமறித்து ருசித்த யானைகளால் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆசனூர்: நள்ளிரவில், லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனப்பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, குட்டியுடன் வெளியேறிய மூன்று யானைகள், ஆசனூர் அருகே சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடமாடின. இதனால் சரக்கு வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். அப்போது ஒரு கரும்பு லாரி வந்தது. வாசத்தை மோப்பம் பிடித்த யானைகள், லாரியை வழிமறித்தன.

ஆசனூர்: நள்ளிரவில், லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனப்பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, குட்டியுடன் வெளியேறிய மூன்று யானைகள், ஆசனூர் அருகே சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடமாடின. இதனால் சரக்கு வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். அப்போது ஒரு கரும்பு லாரி வந்தது. வாசத்தை மோப்பம் பிடித்த யானைகள், லாரியை வழிமறித்தன. அச்சமடைந்த டிரைவர் நிறுத்தவே, அருகில் வந்த யானைகள், தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புத் துண்டுகளை பறித்து பறித்து தின்றன. இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கரும்பை ருசித்த யானை, குட்டியை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் தானாக சென்ற பிறகே வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X